ICDS Development Program 2022
28/11/2022 திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியம் சு.பள்ளிப்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி சீர் திருவிழா கொண்டாடப்பட்டது, தமிழ்நாடு இளம் குழந்தைகள் பராமரிப்பு கூட்டமைப்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சேஞ்ச் தொண்டு நிறுவனம் இணைந்து 10000 ருபாய் மதிப்பில் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுப்பொருட்கள் மற்றும் எழுத்து உபகரணங்கள் நோட்டு புத்தகங்கள் போன்ற பொருட்களை அங்கன்வாடி மையத்திற்கு வழங்கப்பட்டது. இதில் ஊர் தலைவர் சைனம்ம்மாள் சுப்பிரமணி கவுன்சிலர் லட்சுமி பூபதி துணை தலைவர் சிந்துக்காந்தி ஊர்பொதுமக்கள் போன்றோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் விஜயலக்ஷ்மி அவர்கள் இவ்விழாவை ஏற்பாடு செய்தனர்