ICDS Development Program 2022
26/11/2022 திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் கிராமம் அங்கன்வாடி மையம் ஒன்றில் ருபாய் 40 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி சீர் திருவிழா மற்றும் அங்கன்வாடி தினவிழா நடைபெற்றது. தமிழ்நாடு இளம் குழந்தைகள் பராமரிப்பு கூட்டமைப்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சேஞ்ச் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய இந்த விழாவிற்கு ஊராட்சிமன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் மற்றும் துணைத்தலைவர் பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.