26/11/2021 கந்திலி ஒன்றியம் செவ்வாத்தூர் ஊராட்சி கவுண்டப்பனுர் 26 நவம்பர் 2021 காலை 10AM திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வாத்தூர் ஊராட்சி கவுண்டப்பனுர் குக்கிராமத்தில் உள்ள ஆங்கன்வாடியில் சீர் திருவிழா சேஞ்ச் தொண்டு நிறுவனமும், தமிழ்நாடு இளம் குழந்தைகள் பராமரிப்பு கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து நடத்தும் ஆங்கன்வாடி சீர் திருவிழா. இந்த விழாவிற்கு தலைமை தாங்கி நடத்திய ஊராட்சி மன்ற தலைவர் மோகனா. இவர்களின் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது..ஆங்கன்வாடி சீர் திருவிழாவில் முக்கிய பங்கு வகிக்கும் சரஸ்வதி சேஞ்ச் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சேஞ்ச் தொண்டு நிறுவனத்தின் பவுண்டர் பழனிவேல்சாமி, ஆங்கன்வாடி சீர் திருவிழாவிற்கான அணைத்து பொருட்களையும் சேஞ்ச் தொண்டு நிறுவனம் சார்பாகவும் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாகவும் ரூபாய் 8.000 பொதுமக்களிடம் நன்கொடை பெற்று அங்கன்வாடிக்கு தேவையான பொருட்கள் மற்றும் குழந்தைகளின் திறன்மேம்பாட்டிற்கான பயிற்சி பொருட்கள் விளையாட்டு வகைகள் ஆகியவற்றை வழங்கி சிறப்பு செய்தது மேலும் சேஞ்ச் தொண்டு நிறுவனம் ரூபாய் 10,000 தொண்டு நிறுவனம் சார்பாக வழங்கி 18000 மதிப்புடைய பொருட்களை ஆங்கன்வாடிக்கு வழங்கப்பட்டது.
None