சேஞ்ச் கல்வி திட்டத்தின் பாராட்டு விழா 2026 -2027 பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுதல் ,மேற்படிப்பு வழிகாட்டுதல் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 02.06.2026 மாலை 4 மணிக்கு சேஞ்ச் அலுவலகத்தில் நடைபெற்றது .இதில் வரவேற்புரை இயக்குனர் சரஸ்வதி, சேஞ்ச் நிறுவன தொகுப்பாளர் பழனிவேல் சாமி சேஞ்ச் பவுண்ட்ர். தலைமை மதியழகன், விஜயா கேலக்ஸி உரிமையாளர், டாக்டர் ரத்தின நடராஜன், புவனேஸ்வரி லைன்ஸ் முன்னாள் ஆளுநர் மற்றும் புரட்சி, சேவையாளர் வாழ்த்துரை வழங்கினார்கள். 30 கல்லூரி மாணவர்களுக்கு பேக், பைல், நோட், பேனா பென்சில், ரப்பர் ,தண்ணீர் கேன் ,அளவுகோல் என 1600 ரூபாய் மதிப்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. வாழ்த்துரை வழங்கிய அனைவரும் அனைத்து குழந்தைகளும் நன்றாக படித்து பணிகளுக்கு சென்று அடுத்தவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள்